A college student was killed after being pushed by a moving train

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (23) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி சத்யா (20) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்தது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்தில் வந்து கொண்டிருந்த மின்சார ரயிலில் சத்யாவை தள்ளிவிட்டார். இதில் சத்யா ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். கொல்லப்பட்ட சத்யா ஆதம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் ராமலட்சுமியின் மகள் ஆவார் மற்றும் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் ஆவார். மகளின் இறந்த செய்தியை கேட்ட தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். போலீசாரிடம் பிடிபட்ட சதிஷ், எனக்கு கிடைக்காத சத்யா யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதற்க்காக தான் கொன்றேன் என்று வாக்குமூலம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published.