2,500 year old mummies, idols of gods found in Egypt !!

Everyone remembers Egypt as the Pyramid. Chakara is a village near Memphis, south of Cairo, the capital of Egypt. These pyramids, which were designed thousands of years ago, are abundant in the village.

Thus, the village was declared a UNESCO World Heritage Site in the 1970s. The famous pyramids of Giza are also found here. In these pyramids, the bodies of kings and priests are carefully processed and carefully buried in coffins. They are immortalized over time and are called mummies.

Egyptian archaeologists are still struggling to gather enough evidence before reaching final conclusions about the location of the pyramids. In it, the mummy’s coffin is taken out in the presence of visitors in 2020. In that box, which was closed and buried 2,500 years ago, Mummy was wrapped in a cloth decorated to show the face of the late pastor.

In this case, another team of archaeologists recently discovered a new coffin treasure from Sakara. They remained unnoticed and undetected. They are believed to be 2,500 years old. The team also found hundreds of statues of ancient Egyptian gods.

Statues of the gods Anubis, Amun, Min, Osiris, Isis, Nefertam, Bastard and Heather have been found. Also, 250 ancient stone coffins have been excavated.

According to the Egyptian Ministry of Tourism and Archeology, 250 coffins and 150 bronze statues made of multi-colored wood were found in Sakara.

Numerous bronze statues have been found for the first time in the tombs of sacred animals. These coffins are in good order. Among them are mummies. There are also small wooden boxes in it.

A statue of Imhotep, the priest of the sun god Ra and the designer of the Pharaoh’s pyramid, has been discovered. His grave is also said to be found soon.

2,500 ஆண்டுகள் பழமையான மம்மிகள், கடவுள் சிலைகள் எகிப்தில் கண்டெடுப்பு !!

எகிப்து என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிரமிடு தான். எகிப்தின் தலைநகர் கெய்ரோவின் தெற்கே மெம்பிஸ் நகரருகே சக்காரா என்ற கிராமம் உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்ட இந்த பிரமிடுகள் இந்த கிராமத்தில் அதிகளவில் காணப்படுகின்றன. 

இதனால், 1970களில் இந்த கிராமம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. கிசாவின் புகழ்பெற்ற பிரமிடுகளும் இங்கு காணப்படுகின்றன. இந்த பிரமிடுகளில், மன்னர்கள் மற்றும் பாதிரியார்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு, சவப்பெட்டிகளில் கவனமாகப் புதைக்கப்படுகின்றன. அவை காலப்போக்கில் அழியாதவை மற்றும் மம்மிகள் என்று அழைக்கப்படுகின்றன.

எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் பிரமிடுகளின் இருப்பிடம் பற்றிய இறுதி முடிவுகளுக்கு வருவதற்கு முன் போதுமான ஆதாரங்களை சேகரிக்க போராடி வருகின்றனர். அதில், 2020ல் பார்வையாளர்கள் முன்னிலையில் மம்மியின் சவப்பெட்டியை வெளியே எடுத்தனர். 2,500 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டு புதைக்கப்பட்ட அந்த பெட்டியில், மறைந்த சாமியாரின் முகம் காட்டும் வகையில் அலங்கரிக்கப்பட்ட துணியில் மம்மி சுற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், மற்றொரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்தில் சக்காராவில் இருந்து புதிய சவப்பெட்டி புதையலை கண்டுபிடித்தது. அவை யாருக்கும் தெரியாமல், கண்டுபிடிக்கப்படாமல் அப்படியே இருந்தன. அவை 2,500 ஆண்டுகள் பழமையானவை என நம்பப்படுகிறது. பண்டைய எகிப்திய கடவுள்களின் நூற்றுக்கணக்கான சிலைகளையும் அந்த  குழு கண்டுபிடித்தது.

அனுபிஸ், ஆமுன், மின், ஒசிரிஸ், இசிஸ், நெபர்டம், பாஸ்டட் மற்றும் ஹாதர் ஆகிய கடவுள்களின் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், 250 பழமையான கல் சவப்பெட்டிகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, சக்காராவில் 250 சவப்பெட்டிகள் மற்றும் பல வண்ண மரங்களால் செய்யப்பட்ட 150 வெண்கல சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன என தெரிவித்துள்ளது. 

புனித விலங்குகளின் கல்லறைகளில் முதன்முறையாக ஏராளமான வெண்கலச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சவப்பெட்டிகள் நல்ல முறையில் உள்ளன. அவற்றில் மம்மிகளும் உள்ளன. சிறிய மரப்பெட்டிகளையும் அதில் உள்ளன.

சூரியக் கடவுளான ராவின் பூசாரியாகவும், பார்வோனின் பிரமிடு வடிவமைப்பாளருமான இம்ஹோடெப்பின் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது கல்லறை விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.